என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள் நீதி மய்யம்"

    • மதங்களின் அடிப்படை மனிதம் போற்றுவது.
    • பொதுஅமைதிக்கும் மதநல்லிணக்கத்துக்கும் ஊறுவிளைவிக்கும் எந்தப் புதிய செயல்திட்டங்களுக்கும் நாம் பலியாகி விடக்கூடாது.

    சென்னை :

    திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மதங்களின் அடிப்படை மனிதம் போற்றுவது. பொதுஅமைதிக்கும் மதநல்லிணக்கத்துக்கும் ஊறுவிளைவிக்கும் எந்தப் புதிய செயல்திட்டங்களுக்கும் நாம் பலியாகி விடக்கூடாது. அன்பே சிவம், அறிவே பலம் என்று கூறியுள்ளார். 



    • அனுபவம் தான் நம் எல்லோரையும் விட சிறந்த ஆசிரியர்.
    • நீங்கள் கற்றுக்கொள்ளத் தகுதியானதை உங்களுக்கு அது கற்று தருகிறது.

    கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் கலந்து கொண்டார். அவரிடம் 2026 தமிழக தேர்தலுக்கு முன்னதாக விஜய், திமுகவை தனது அரசியல் எதிரி என்று எவ்வாறு அடையாளம் கண்டார்? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதே போல் மக்கள் நீதி மைய்யத்தின் எதிரி யார்? என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த கமல்ஹாசன், , "பெரும்பாலான கட்சிகள் அடையாளம் காணத் துணியும் எதிரியை விட எனது எதிரி பெரியவர். சாதிவெறி தான் எனது எதிரி. நான் அதை கொலை செய்ய நினைக்கிறன். கொலை போன்ற வன்முறை வார்த்தையை ஏன் பயன்படுத்த வேண்டும்? என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் சாதிவெறி அதைவிட மிகவும் வன்முறையானது" என்று தெரிவித்தார்.

    கமலிடம், விஜய்க்கு ஏதாவது ஆலோசனை இருக்கிறதா என்று கேட்கப்பட்டதற்கு, "நான் ஆலோசனை வழங்கும் நிலையில் இல்லை. ஒருவேளை ஆலோசனை வழங்க இது சரியான தருணமாக இருக்காது. அனுபவம் தான் நம் எல்லோரையும் விட சிறந்த ஆசிரியர், ஏனென்றால் நமக்கெல்லாம் ஒரு சார்பு இருக்கிறது. ஆனால் அனுபவத்திற்கு அந்த சார்பு கிடையாது. நீங்கள் கற்றுக்கொள்ளத் தகுதியானதை உங்களுக்கு அது கற்று தருகிறது" என்று கூறினார்.

    • எப்போதும் அண்மையில் இருக்கும் இளைய சகோதரர் சீமான்.
    • பின்பற்றும் கொள்கையில் இவர் காட்டும் பிடிமானமும் பிடிவாதமும் வியத்தலுக்குரியவை.

    நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்துள்ளார்.

    இதுதொடர்பாக கமல்ஹாசன் வௌயிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    எப்போதும் அண்மையில் இருக்கும் இளைய சகோதரர் சீமான். பிறந்த பிரதேசமானாலும் சரி, தேர்ந்துகொண்ட திரைத்துறையானாலும் சரி பக்கத்திலேயே பயணம் செய்பவர்.

    பின்பற்றும் கொள்கையில் இவர் காட்டும் பிடிமானமும் பிடிவாதமும் வியத்தலுக்குரியவை.

    தான் தோன்றுவது எந்த அரங்காக இருந்தாலும் அதில் புகழொடு தோன்றும் பண்பும் திறனும் மிக்க அன்புத் தம்பி, நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர், செந்தமிழன் சீமான் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். இந்நாளில் அவரை அணைத்து வாழ்த்துவது எனக்கு மகிழ்ச்சி.

    நீடு வாழ்க இளவல்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பொதுவாக அப்பாவின் நண்பர்களோடு பிள்ளைகள் நெருக்கம் காட்ட மாட்டார்கள்.
    • நேற்றைய மாலை விருந்தில் மகிழ்ந்தோம், நெகிழ்ந்தோம்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் அடையாறு போட் கிளப்பில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் எம்.பி.யின் வீட்டுக்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இந்த புகைப்படங்களை தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    என்னுடைய அழைப்பை ஏற்று எனது இல்லத்துக்கு வருகை தந்து, என்னையும் என் மூத்த சகோதரர் சாருஹாசன் அவர்களையும் கவுரவப்படுத்திய தமிழ்நாடு முதல்வர், அன்புக்குரிய நண்பர் மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் தம்பதியருக்கும், துணை முதலமைச்சர், என் அன்புக்குரிய இளவல் உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா தம்பதியருக்கும், என் அன்புக்குரிய நண்பர் சபரீசனுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பொதுவாக அப்பாவின் நண்பர்களோடு பிள்ளைகள் நெருக்கம் காட்ட மாட்டார்கள். மரியாதையுடனான சிறு விலகல் இருக்கும். ஆனால், முத்தமிழறிஞர் உடனான எனது உறவு 3 தலைமுறைத் தாண்டிய நெருக்கம் கொண்டது. நிபந்தனைகளற்ற தூய பேரன்பினால், அளவு கடந்த மரியாதையால் பிணைத்துக்கட்டப்பட்டது எங்கள் உறவு. அதை உறுதி செய்யும் வகையில் அமைந்தது இந்த சந்திப்பு.

    நேற்றைய மாலை விருந்தில் மகிழ்ந்தோம், நெகிழ்ந்தோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



    • என் மீது அளவற்ற அன்போடு தோழமை பாராட்டும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்.
    • அரசியல் தொண்டும் - திரையாளும் தங்களது கலைத் தொண்டும் மென்மேலும் சிறந்திட வாழ்த்துகிறேன்!

    சென்னை:

    நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்கள். இதனால் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    பன்முகத்திறமையோடு தமிழ்த் திரையுலகை உலகத் தரத்துக்குக் கொண்டு சென்றிடும் தீராத கலைத்தாகமும் - பன்முகத்தன்மை மிக்க நம் நாட்டை நாசகர பாசிச சக்திகளிடமிருந்து மீட்கும் தணியாத நாட்டுப்பற்றும் கொண்டு, என் மீது அளவற்ற அன்போடு தோழமை பாராட்டும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்- கலைஞானி கமல்ஹாசனுக்கு அன்பு நிறை பிறந்தநாள் வாழ்த்துகள்!

    நாடாளும் ஆட்சியாளர்கள் நெறி பிறழாது நடந்திட, பாராளுமன்றத்தில் முழங்கிடும் தங்களது அரசியல் தொண்டும் - திரையாளும் தங்களது கலைத் தொண்டும் மென்மேலும் சிறந்திட வாழ்த்துகிறேன்! என்று கூறியுள்ளார். 



    • நீதிமன்றங்களில் கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
    • மக்கள் நீதி மய்யம் தலைவரும் எம்பியுமான கமல்ஹாசன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    கரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 27ம் தேதி அன்று, தவெக சார்பில் நடைபெற்ற விஜயின் பரப்புரையின்போது கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனார்.

    இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும், மாநில மற்றும் தேசிய அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    நீதிமன்றங்களில் கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையும் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், 41 பேர் உயிரிழந்த கரூர் வேலுச்சாமிபரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவரும் எம்பியுமான கமல்ஹாசன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் சென்று சந்தித்து கமல்ஹாசன் ஆறுதல் கூறினார்.

    • முதற்கட்டமாக கடந்த சனிக்கிழமை அன்று திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பிரசாரம்.
    • இரண்டாவது கட்ட பிரசாரம் நாகை மற்றும் திருவாரூரில் நடைபெற்றது.

    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக கடந்த சனிக்கிழமை அன்று திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.

    நேற்று இரண்டாவது கட்ட பிரசாரம் நாகை மற்றும் திருவாரூரில் நடைபெற்றது.

    அப்போது பேசிய விஜய்," இந்த கூட்டம் ஓட்டாக மாறாது என்கிறார்கள். அப்படியா..?" என்று தொண்டர்கள் மத்தியில் கேள்வி எழுப்பினார்.

    இந்நிலையில், விஜயின் பரப்புரை தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

    அப்போது அவர் கூறுகையில்," கூடும் கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது. அது விஜய்க்கு மட்டும் அல்ல, எனக்கும் பொருந்தும்.

    நல்ல பாதையில் செல்ல வேண்டும், தைரியமாக முன்னேறுங்கள், மக்களுக்காக செய்யுங்கள்" என விஜய்க்கு கமல்ஹாசன் அறிவுரை வழங்கியுள்ளார்.

    • சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
    • தனது ஜனநாயகக் கடமைகளில் சிறந்து விளங்கிட அவரை வாழ்த்தி மகிழ்கிறேன்.

    சென்னை:

    துணை ஜனாதிபதியாக தேர்வாகி உள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேசமான நமது இந்தியாவின் துணை குடியரசுத் தலைவராக தேர்வாகி இருக்கும் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    நமது அரசியலமைப்பின் விழுமியங்களைப் போற்றிப் பாதுகாக்கும் வகையில், தனது ஜனநாயகக் கடமைகளில் சிறந்து விளங்கிட அவரை வாழ்த்தி மகிழ்கிறேன் என்று கூறியுள்ளார். 

    • ஒருத்தர் நல்லது செய்யும்போது எந்தக்கட்சி என்று நான் பார்த்ததில்லை.
    • நாட்டுக்கு நல்லது நடக்குது என்றால் எதிர்க்கட்சியாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளவேண்டியது தான்.

    நாடு முழுவதும் தெரு நாய்கள் அதிகரித்து அதனால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மேலும் இது ஒரு சமூக பிரச்சனையாக உருவெடுத்து தெரு நாய்களுக்கு ஆதரவானர்கள், அவற்றை எதிர்க்கும் தரப்பினர் என இருதரப்பினர் தங்களது கருத்துகளை முன்வைத்து வாதிடுகின்றனர். இதனால் சமூக வலைத்தளங்களில் விவாதம் அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு வந்த மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தெருநாய்கள் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், தீர்வு ரொம்ப சிம்பிள்-ங்க. விஷயம் தெரிந்தவர்கள், உலக சரித்திரம் தெரிந்தவர்கள், சமூக சுகாதாரம் என்னன்னு தெரிந்தவர்கள், கழுதை எங்க காணோம் என்று எங்கேயாவது கவலைப்படுகிறார்களா?

    கழுதைகள் எல்லாம் காணாமல் போய்டுச்சு? நமக்காக எவ்வளவு பொதி சுமைந்திருக்கு? இப்ப பார்க்கிறதே இல்லையே... கழுதைய காப்பத்தணும்னு யாராவது பேசுறாங்களா?. எல்லா உயிர்களையும் காப்பத்தணும்னு, எவ்வளவு முடியுமோ காப்பத்தணும். அவ்வளவுதான் என்னுடைய கருத்து என்றார்.

    மேலும், முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் ரூ.3000 கோடிக்கு மேல் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. அதை பா.ஜ.க. விமர்சிப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கமல்ஹாசன், ஒருத்தர் நல்லது செய்யும்போது எந்தக்கட்சி என்று நான் பார்த்ததில்லை. நாட்டுக்கு நல்லது நடக்குது என்றால் எதிர்க்கட்சியாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளவேண்டியது தான். நாளைக்கு அவர்கள் நல்லது செய்தால் சொல்லத்தான் போகிறோம் என்றார். 

    • நான் ஒரு சமூகத்திற்காக அல்ல, பொது நன்மைக்காகப் பேசுவேன்.
    • டெல்லியில் தமிழ்நாட்டின் உறுதியான குரலாக ஒலிக்க பாடுபடுவேன்.

    திமுக கூட்டணி சார்பில் தேர்வான மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவையில் எம்.பி.யாக தமிழில் பதவியேற்றார்.

    பதவியேற்றுக் கொண்டு கமல்ஹாசன் உறுப்பினர் பதவியேற்பு ஆவணங்களில் கையெழுத்திட்டார்.

    கமல்ஹாசன் எம்.பி பதவியேற்ற நிலையில், எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது-

    நமது நாட்டை பிரிவினை ஆபத்துகளில் இருந்து மீட்க வேண்டும்.

    எம்.பி என்ற இந்த அத்தியாயத்தை ஒரு முடிவாக அல்ல, ஒரு தொடக்கமாகவே தொடங்குகிறேன்.

    அரசமைப்பின் மீதான மரியாதையுடன், ஜனநாயகம் மீதான நம்பிக்கையுடன் தொடங்குகிறேன்.

    நான் ஒரு சமூகத்திற்காக அல்ல, பொது நன்மைக்காகப் பேசுவேன்.

    அரசியலமைப்பின்படி மனசாட்சியுடன் சேவை செய்வதற்கு ஒரு உறுதியான சபதம் எடுத்துள்ளேன்.

    டெல்லியில் தமிழ்நாட்டின் உறுதியான குரலாக ஒலிக்க பாடுபடுவேன்.

    குறுகிய ஆதாயத்திற்காக அல்லாமல் தேசிய வளர்ச்சிக்காக பாடுபடுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
    • உங்கள் வாழ்த்துகள், மக்கள் வாழ்த்துகளுடன் டெல்லி சென்று உறுதிமொழி ஏற்க உள்ளேன்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 6 மாநிலங்களவை எம்.பி.க்கள் நாளை பதவியேற்க உள்ளனர். தி.மு.க. சார்பில் வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம், அ.தி.மு.க. சார்பில் தனபால், இன்பதுரை, மக்கள் நீதி மயயம் சார்பில் கமல்ஹாசன் ஆகியோர் நாளை பதவியேற்க உள்ளனர்.

    மாநிலங்களவை எம்.பி.யாக நாளை பதவியேற்க உள்ள நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். இதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    இந்தியனாக எனக்கு கொடுக்கப்பட்ட கடமையை செய்ய உள்ளேன். பெருமையோடு இன்று டெல்லி செல்கிறேன். பாராளுமன்றத்தில் கன்னிப்பேச்சு குறித்து இப்போது சொல்ல முடியாது. உங்கள் வாழ்த்துகள், மக்கள் வாழ்த்துகளுடன் டெல்லி சென்று உறுதிமொழி ஏற்க உள்ளேன் என்றார். 



    • ஆட்டோ டிரைவரும், சினேகாவும் மோதலில் ஈடுபட்டனர்.
    • இருவரும் ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கினர்.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிர் அணி மாநில செயலாளராக இருப்பவர் சினேகா (வயது 32). இவர், நேற்று தனது தோழியுடன் வாடகை ஆட்டோவில் பயணம் செய்தார்.

    அப்போது ஆட்டோவை தாறுமாறாக ஓட்டி சென்றது குறித்து சினேகா கேள்வி எழுப்பி உள்ளார். இதையடுத்து டிரைவர் பிரசாத்துக்கும், சினேகாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அந்த சமயத்தில் சினேகா ஆட்டோ சாவியை பறிக்க முயன்றார். அப்போது ஆட்டோ டிரைவரும், சினேகாவும் மோதலில் ஈடுபட்டனர். இருவரும் ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கினர். அந்த வழியாக வந்த பொதுமக்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர். இருந்தபோதிலும் இருவரும் தாக்குதலை கைவிடவில்லை.

    சம்பவம் குறித்து கேள்விப்பட்ட மயிலாப்பூர் போலீசார் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். சினேகா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் பிரசாத்தை கைது செய்தனர்.

    இதனை தொடர்ந்து ஆட்டோ டிரைவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சினேகா மற்றும் அவரது தோழியுமே ஆட்டோ டிரைவர் பிரசாத்தை முதலில் ஒருமையில் திட்டி அவதூறாக பேசினர் என்பதும், அதன் பேரில் பிரசாத் அவர்களை ஆட்டோவிலிருந்து இறங்க சொன்னதும் தெரியவந்தது.

    இதையடுத்து ஆட்டோ டிரைவர் பிரசாத்திடம் புகார் பெறப்பட்டு சினேகா மீது இரண்டு பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

    ×